ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறப்பு
[வெள்ளிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2006, 17:14 ஈழம்] [ம.சேரமான்]
puthinam.com
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக வன்னி பிரதேசத்துக்குச் செல்வதற்கான வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திறக்கப்பட்டது.
260 பொது சேவையாளர்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியா- ஓமந்தை சோதனை சாவடி மூடப்பட்டமையால் பாரிய துன்பங்களுக்கு உள்ளாகினர்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று திரண்ட இந்த மக்கிள் தங்களை விடுதலைப் புலிகளின் வன்னி பிரதேசத்துக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். வவுனியா மாவட்ட அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு வெளியே வர விடாமல் அவர்களை முடக்கினர்.
சம்பவ இடத்துக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கண்காணிப்புக் குழுவினரும் அங்கு சென்று விசாரணைகளை நடத்தினர். அதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
அரச அதிபரால் ஓமந்தை சோதனைச் சாவடிக்கு மக்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தாண்டிக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் இப்பேரூந்துகள் இடை மறிக்கப்பட்டன. இதனால் அங்கு இரு மணித்தியாலம் மேலும் காத்திருக்க நேரிட்டது. அதன் பின்னர் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தரப்பிலும் பதில் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு ஓமந்தை சோதனைச் சாவடி திறக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
<< Home