Monday, May 11, 2009

இலங்கை குண்டுவீச்சில் 1000 பேர் பலி: அரசு மருத்துவர் தகவல்

First Published : 11 May 2009 02:47:40 PM IST

Last Updated : 11 May 2009 02:59:09 PM IST

கொழும்பு, மே 11- இலங்கையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதலில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக அரசு மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் பெருமளவு பொதுமக்களும் தங்கியுள்ளனர். அங்கு கடந்த இரு நாட்களாக இலங்கை ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பொதுமக்களில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கு தற்காலிகமாக செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் வி. சண்முகராஜா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பதுங்குக்குழிகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அதே இடத்திலேயே எரிக்கப்பட்டதாகவும், காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இத்தாக்குதலை 'ரத்தக்குளியல்' என்று குறிப்பிட்டுள்ள ஐநா, இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை போர் குறித்து ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விவாதிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகம், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும, இலங்கைக்கு நிதியுதவி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் இதற்கான முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

(Dinamani 11.05.2009)


0 Comments:

Post a Comment

<< Home